கும்பகோணத்தில் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி…. ஆவணங்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டன!

 

கும்பகோணத்தில் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி…. ஆவணங்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டன!

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியில் 700 உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியில் மொத்தமாக 700 உறுப்பினர்கள் உள்ளன. இவர்கள் சீமானின் செயல்பாடுகளில் குறை இருப்பதாக கூறி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் கும்பகோணம் பூத் கமிட்டியை கலைத்ததுடன், பூத் கமிட்டி கட்டமைப்பு படிவத்தை அரசலாற்றில் வீசியுள்ளனர்.

கும்பகோணத்தில் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி…. ஆவணங்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டன!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா, ” சீமானின் செயல்பாடுகள் கொள்கைக்கு முரணாக உள்ளது. அவர் தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் என்ற கருத்தையும் கேட்காமல் அனைவரையும் புறக்கணிக்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழங்கும் சீமான் வேறு மாநிலத்தவருக்கும், வேற்று மொழி பேசுபவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் நிறுத்தப்பட உள்ளார். இதனால் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தி அமைந்துள்ளதால் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புகைப்படம் என்பதால் அதை ஆற்றில் வீசாத உறுப்பினர்கள் அதை கட்சித் தலைமையிடம் ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.