கேரள சட்டப்பேரவை தேர்தலில் 74.02 சதவீதம் வாக்குப்பதிவு.. 2016 தேர்தலை காட்டிலும் குறைவு..

கேரள சட்டப்பேரவை தேர்தலில் 74.02 சதவீதம் வாக்குப்பதிவு.. 2016 தேர்தலை காட்டிலும் குறைவு..

கேரளாவில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் 74.02 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டபேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் 74.02 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 2016 சட்டப்பேரவை தேர்தல் நடந்த வாக்குப்பதிவை காட்டிலும் குறைவாகும். அந்த தேர்தலில் 77.53 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

கேரள சட்டப்பேரவை தேர்தலில் 74.02 சதவீதம் வாக்குப்பதிவு.. 2016 தேர்தலை காட்டிலும் குறைவு..
தேர்தல் ஆணையம்

அதிகபட்சமாக கோழிக்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 77.9 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதேவேளையில் குறைந்தபட்சமாக பத்தம்திட்டாவில் 68.09 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது. கேரளாவில் நேற்று தேர்தலின்போது, 150 வாக்குப்பதிவு யூனிட், 150 கட்டுப்பாட்டு யூனிட் மற்றும் 747 வி.வி.பி.ஏ.டி. யூனிட்கள் பழுதடைந்ததாக தகவல்.

கேரள சட்டப்பேரவை தேர்தலில் 74.02 சதவீதம் வாக்குப்பதிவு.. 2016 தேர்தலை காட்டிலும் குறைவு..
தேர்தல்

திருவனந்தபுரத்தின் கட்டாயிகோணம், கழககோட்டம் ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் போலி வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக புகார்கள் தேர்தல் ஆணையத்துக்க சென்றது. அதைதவிர்த்து பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் இதுவும நடைபெறவில்லை.