டூ வீலரில் செல்லும் எல்லோரும் ஹெல்மெட் போடுங்க.. இல்லைன்னா 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து…

டூ வீலரில் செல்லும் எல்லோரும் ஹெல்மெட் போடுங்க.. இல்லைன்னா 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து…

கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். இதனை பின்பற்றவில்லையென்றால் அபராதம் மற்றும் 3 மாத காலத்துக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கர்நாடக மோட்டார் வாகன சட்டப்படி, அனைத்து இரு சக்கர வாகன (பைக்) ஓட்டிகளும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். இந்த சட்டங்களை பலரும் பின்பற்றுவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் போது உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

டூ வீலரில் செல்லும் எல்லோரும் ஹெல்மெட் போடுங்க.. இல்லைன்னா 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து…
ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள்

இந்த சூழ்நிலையில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம் என்ற சட்டத்தை கர்நாடகாவில் கடுமையாக பின்பற்றும்படி கர்நாடாக சாலை பாதுகாப்பு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடக போக்குவரத்து துறை தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

டூ வீலரில் செல்லும் எல்லோரும் ஹெல்மெட் போடுங்க.. இல்லைன்னா 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து…
உச்ச நீதிமன்றம்

அதில், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் (ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்) உள்பட அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். இந்த விதிமுறையை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிப்பதோடு, 3 மாத காலத்துக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருப்பவர்களில் 4 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஹெல்மெட் அணிவது அவசியமில்லை. வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கான பழைய விதிமுறையையும் கடுமையாக பின்பற்றும்படி போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.