6 வருஷத்துக்கு பிறகு…. மீண்டும் பத்து ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, லுங்கி திட்டம்… ஜார்க்கண்ட் அரசு அறிமுகம்

6 வருஷத்துக்கு பிறகு…. மீண்டும் பத்து ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, லுங்கி திட்டம்… ஜார்க்கண்ட் அரசு அறிமுகம்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் தலைமையிலான அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டுக்கு இரு முறை ரூ.10 ரூபாய்க்கு சேலை, வேஷ்டி மற்றும் லுங்கி திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. 2014ம் ஆண்டில் ஹேமந்த் சோரன் முதல் முறையாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்தபோது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு சேலை, வேஷ்டி, லுங்கி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

6 வருஷத்துக்கு பிறகு…. மீண்டும் பத்து ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, லுங்கி திட்டம்… ஜார்க்கண்ட் அரசு அறிமுகம்

ஆனால், அதே ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ரூபாய்க்கு சேலை, வேஷ்டி மற்றும் லுங்கி திட்டத்தை முடக்கி வைத்தது. அதன்பிறகு அந்த திட்டம் செயல்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

6 வருஷத்துக்கு பிறகு…. மீண்டும் பத்து ரூபாய்க்கு சேலை, வேஷ்டி, லுங்கி திட்டம்… ஜார்க்கண்ட் அரசு அறிமுகம்

தற்போது முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டுக்கு இரு முறை ரூ.10 ரூபாய்க்கு சேலை, வேஷ்டி மற்றும் லுங்கி திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது. உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் விநியோக கடைகளில் துணிகளை வாங்கி கொள்ளலாம்.