இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்தத்தா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவுக்குள் வெடிமருந்தை வைத்து சில நயவஞ்சர்கள் கொடுத்துள்ளனர். அந்த பசு அதனை சாப்பிட்டபோது வாய்க்குள் வெடி வெடித்தது. இதனால் அந்த பசுவின் வாய் பகுதி கடுமையாக காயம் அடைந்தது. பசுவின் வாய் கடுமையாக காயம் அடைந்திருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

பசு

பசுவின் உரிமையாளர் குர்தியால் சிங் இது குறித்து கூறுகையில், தனது பக்கத்து வீட்டு நந்தலால்தான் பசுவுக்கு வெடிபொருட்களால் உணவு அளித்ததாக குற்றச்சாட்டினார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இது போன்ற சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது மற்றும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர்

கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாச்சி பழத்துக்குள் வெடி வைத்து கொலை செய்த சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தின் தாக்கமே குறையாத நிலையில், கர்ப்பிணி பசுக்கு கோதுமை மாவுக்குள் வெடிவைத்து உணவாக கொடுத்து வெடிக்க செய்து சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close