அரியானாவில் பெயிலில் வந்த கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்…. அடுத்த நாளே போலீசிடம் சிக்கிய நபர்

அரியானாவில் பெயிலில் வந்த கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்…. அடுத்த நாளே போலீசிடம் சிக்கிய நபர்

அரியானாவில் ஜிண்ட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனையடுத்து அந்த நபரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றினர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த மருத்துவமனையிலிருந்து தப்பியோடி விட்டார். இது தொடர்பாக ஜிண்ட் டி.எஸ்.பி. தரம்பீர் சிங் கூறியதாவது:

அரியானாவில் பெயிலில் வந்த கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்…. அடுத்த நாளே போலீசிடம் சிக்கிய நபர்

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன்கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டவர். இந்த வாரம்தான் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் கொரோனா வைரஸ் நோயாளி என அறிவிக்கப்பட்டவர். அதனால் அவரை நாங்கள் அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். அவருக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியதால் அவருக்கான பாதுகாப்பை நாங்கள் நீக்கினோம். மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் வசதியில் உள்ள அறையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அரியானாவில் பெயிலில் வந்த கொரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்…. அடுத்த நாளே போலீசிடம் சிக்கிய நபர்

அந்த அறையில் உள்ள சன்னலை உடைத்து, பின் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் குதித்துள்ளார். பின் கயிறை பயன்படுத்தி கீழே இறங்கி தப்பி சென்று விட்டார். பேரழிவு நிர்வாக சட்டம் மற்றும் அரசு பணியாளரின உத்தரவுகளை மீறியது பிரிவுகளின் அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அவரை விரைவில் பிடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று மாலை தப்பியோடிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்ததாக தகவல்.