மன்னிச்சுக்கோங்க.. தடுப்

 

மன்னிச்சுக்கோங்க.. தடுப்

பூசின்னு தெரியாது… திருடிய தடுப்பூசிகளை காவல் நிலையத்தின் வெளியே வைத்த சென்ற கொள்ளையர்கள்

ஹரியானாவில் அரசு மருத்துவமனையில் திருடிய தடுப்பூசிகளை அடுத்த நாள் காவல் நிலையத்தின் வெளியே மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளையர்கள் வைத்து சென்ற ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் கடந்த புதன்கிழமை இரவு 2 கொள்ளையர்கள் நுழைந்தனர். நேராக கொள்ளையர்கள் இருவரும் மருத்துவமனையின் ஸ்டோர் பகுதிக்கு சென்றனர். ஸ்டோர் ரூமின் கதவை உடைத்து அங்கு 182 கோவிஷீல்டு மற்றும் 400 கோவாக்சின் டோஸ் தடுப்பூசி வைக்கப்பட்டு இருந்த பாக்சை திருடி சென்றனர். நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த ஒரு துப்புரவு பணியாளர் ஸ்டோர் ரூம் கதவு உடைக்கப்பட்டதுடன், உள்ளே தடுப்பூசி பொருட்கள் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மன்னிச்சுக்கோங்க.. தடுப்
தடுப்பூசி

இதனையடுத்து அந்த துப்புரவு பணியாளர் ஒரு நர்சிங் ஊழியரை அழைத்து திருட்டு சம்பவத்தை தெரிவித்துள்ளார். அதேசமயம் அந்த அறையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றம் லேப்டாப் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் திருடப்படவில்லை. கொள்ளை சம்பவத்துக்கு பிறகு தடுப்பூசி போட தடுப்பூசி எதுவும் மருத்துவமனையில் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.

மன்னிச்சுக்கோங்க.. தடுப்
திருடர்களின் மன்னிப்பு கடிதம்

இந்நிலையில் நேற்று ஜின்ட் சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தின் அருகே உள்ள டீ கடையின் வெளியே, நேற்று அரசு மருத்துவமனையில் கொள்ளையடித்த கோவிட் தடுப்பூசிகளை கொள்ளையர்கள் வைத்து விட்டு சென்றனர். அந்த பெட்டியுடன் கூடவே மன்னிக்கவும்- எனக்கு இது கொரோனா வைரஸ் தடுப்பூசி தெரியாது என கடிதத்தையும் வைத்து விட்டு சென்றனர். அந்த பெட்டியை போலீசார் மீட்டனர். கொள்ளையர்களின் அடையாளத்தை அறிய டீ கடை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கோவிட் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் திருடிய தடுப்பூசிகளை கொள்ளையர்கள் திருப்பி கொடுத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.