கேரள தங்க கடத்தல் விவகாரம்… முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக்கோரும் காங்கிரஸ், பா.ஜ.க.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் தொண்டர்கள்

இதனையடுத்து தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் அம்மாநிலம் முழுவதும் தனி தனியாக பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் 3 லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் முதல்வர் இல்லத்தை நோக்கி சென்றனர். ஆனால் நகரத்தின் நுழைவு இடங்களில் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ரமேஷ் சென்னிதாலா

காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா கூறுகையில், பினராயி விஜயன் தங்க கடத்தல் வழக்கில் சந்தேகப்படும் நபர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார். முதல்வர் அலுவலகம் மற்றும் ஐ.டி. துறையின் நல்ல உறவை ஸ்வப்னா சுரேஷ் நன்றாக அனுபவிக்கிறார். பினராயி விஜயன் உடனடியாக பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கேரள பா.ஜ.க. தலைவர் கே. சுரேந்திரன் கூறுகையில், தங்க கடத்தலில் ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தபிறகும் முதல்வர் இன்னும் எந்தவொரு விசாரணைக்கு உத்தரவிடவில்லை. முதல்வருக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் அவர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக பிரதமருக்கு கடிதம் எழுவதை தேர்வு செய்தார், தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ள தனது நெருங்கிய உதவியாளரின் எந்தவொரு பொறுப்பையும் எடுப்பதில் இருந்து தப்பிப்பது மற்றும கண் துடைப்பு ஆகும் என தெரிவித்தார்.

Most Popular

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு...

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

உலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட. சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!