திண்டுக்கல்- 5 பைசாவிற்கு பிரியாணி – அலைமோதிய அசைவ பிரியர்கள்

 

திண்டுக்கல்- 5 பைசாவிற்கு பிரியாணி – அலைமோதிய அசைவ பிரியர்கள்

திண்டுக்கல்

உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி திண்டுக்கல்லில் 5 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணியை நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் இன்று 5 பைசா நாணயம் கொண்டு வரும் 200 பேருக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என

திண்டுக்கல்- 5 பைசாவிற்கு பிரியாணி – அலைமோதிய அசைவ பிரியர்கள்

அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, 5 பைசா நாணயங்களுடன் அதிகாலை முதலே ஏராளமான அசைவ பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு அனைவரும் காத்திருக்க வைக்கப்பட்டனர். பின்னர், விற்பனை துவங்கியவுடன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை 5 பைசா நாணயங்களை வழங்கி, ஆர்வமுடன் பிரியாணியை சுவைத்துச் சென்றனர். இளைய தலைமுறையினருக்கு கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் உணர்த்தும் வகையிலும், பழைமையான நாணயங்களின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான் கூறினார்.