வெளிநாட்டு வேலை கிடைக்காத விரக்தியில், தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை!

 

வெளிநாட்டு வேலை கிடைக்காத விரக்தியில், தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை!

கோவை

கோவையில் வெளிநாட்டு வேலை கிடைக்காத வேதனையில் தனியார் மருத்துவமனை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ரூபன் (35). இவர் கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ரூபன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி நாட்டில் வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகறது.

வெளிநாட்டு வேலை கிடைக்காத விரக்தியில், தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை!

இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதி அறையில் ரூபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ரூபனின் விடுதி அறையில் போலீசார் சோதனையிட்டபோது, அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் சிக்கியது. அதில், வெளிநாடு வேலை கிடைக்காத விரக்தியில், தற்கொலை செய்து கொள்வதாக ரூபன் தெரிவித்திருந்தார். தற்கொலை சம்பவம் குறித்து ரூபனின் மனைவி புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.