டெல்லியில் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யும் குடும்பங்கள்.. ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லியில் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யும் குடும்பங்கள்.. ஆய்வறிக்கையில் தகவல்

தலைநகர் டெல்லியில் வசிக்கும் குடும்பங்களில் 1.66 சதவீத குடும்பங்கள் ஒரு மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்கின்றன என ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியின் சமூக-பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்காக டெல்லி அரசு கடந்த 2018 நவம்பர் முதல் 2019 நவம்பர் வரை ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. தற்போது அந்த ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர் நிலை, வீட்டு அளவு, வீடுகளின் சராசரி மாதச் செலவு, தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லியில் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யும் குடும்பங்கள்.. ஆய்வறிக்கையில் தகவல்

தலைநகர் டெல்லியில் வசிக்கும் குடும்பங்களில் சுமார் 50 சதவீதம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவிடுகின்றன. அதேசமயம் 1.66 சதவீத குடும்பங்கள் மட்டுமே ஒரு மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவு செய்கின்றன. 42.5 சதவீத குடும்பங்கள் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாகவே செலவிடுகின்றனர்.

டெல்லியில் மாதத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்யும் குடும்பங்கள்.. ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லியில் 66.63 சதவீத குடும்பங்கள் சொந்த வீடுகளில் வாழ்வதாக அறிக்கை கூறுகிறது. அதேசமயம் 32.28 சதவீத குடும்பங்கள் வாடகை வீடுகளில் காலத்தை தள்ளி வருவதாக தகவல். 51.78 சதவீத குடும்பங்களில் சொந்த பயன்பாட்டுக்கு மோட்டார் வாகனம் உள்ளது. அதில் 40.35 சதவீத குடும்பங்களில் இரு சக்கர வாகனம் மட்டுமே உள்ளது. 4.43 சதவீத குடும்பங்களில் 4 சக்கர வாகனங்கள் உள்ளது. அதேவேளையில், 6.59 சதவீத குடும்பங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன.