கடலூரில் 5227 பேர் நீட் தேர்வு எழுதினர்: கொரோனா மாணவ, மாணவிகளுக்கு தனி அறை

கடலூரில் 5227 பேர் நீட் தேர்வு எழுதினர்: கொரோனா மாணவ, மாணவிகளுக்கு தனி அறை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே திட்டமிட்டபடி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது- கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் 5227 பேர் நீட் தேர்வை எழுதினர்.கொரோனா தொற்று உள்ள மாணவ மாணவிகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது.

கடலூரில் 5227 பேர் நீட் தேர்வு எழுதினர்: கொரோனா மாணவ, மாணவிகளுக்கு தனி அறை

மருத்துவ கல்வியில் சேர இந்திய அளிவில் தேசிய தேர்வு முகமையால் NEET நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் நடைபெறும் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுதவுள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்தில் 5227 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.
மொத்தம் 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

கடலூரில் 5227 பேர் நீட் தேர்வு எழுதினர்: கொரோனா மாணவ, மாணவிகளுக்கு தனி அறை

பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் காலை 11 மணிக்கே தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது. வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கிருமி நாசினி, குடிநீர் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் சோதிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கடலூரில் 5227 பேர் நீட் தேர்வு எழுதினர்: கொரோனா மாணவ, மாணவிகளுக்கு தனி அறை

மேலும், தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில், விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்பட்ட புகைப்படம், முகக்கவசம் உள்ளிட்டவைகள் மாணவர்கள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிந்தது. இதில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதினர்.