Home தமிழகம் 'கூட்டுறவு வங்கி கடன் கொடுக்காவிட்டால் ஏழைகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கிவிடுவார்கள்' கே.பாலகிருஷ்ணன்

‘கூட்டுறவு வங்கி கடன் கொடுக்காவிட்டால் ஏழைகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கிவிடுவார்கள்’ கே.பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளுக்கும் விவசாயிகளும் நல்ல உறவு இருந்துவருகிறது. வேலைக்குச் செல்ல முடியாத இந்த காலத்தில் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைக்க முதலில் நாடுவது கூட்டுறவு வங்கிகளையே காரணம் அங்கு வட்டி குறைவு. ஆனால், திடீரென்று கூட்டுறவு வங்கிகளில் வாய்மொழி உத்திரவாக, இனி நகைக்கடன் கொடுக்ககூடாது என வந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

balakrishnan-
அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் தனியார் வட்டி கடைகள் மற்றும் கந்துவட்டி பேர்வழிகளிடம் இவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகும்.

 co operative bank

எனவே, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி வழங்குவது போல 6 சதமான வட்டியில் நகைக் கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தமிழக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும். மேலும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே நகைக் கடன் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொரோனா காலத்தில் வட்டி பல மடங்கு உயர்ந்து கொண்டே உள்ளது.

ஆகவே, சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாதாரண ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றித் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40வது ஆட்டத்தில் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு...

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல...
Do NOT follow this link or you will be banned from the site!