உண்மை நம்மோடு உள்ளது உண்மை வெல்லும்… காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கையூட்டிய அசோக் கெலாட்

உண்மை நம்மோடு உள்ளது உண்மை வெல்லும்… காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கையூட்டிய அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதலால் காங்கிரஸ் அரசு தள்ளாட்டம் கண்டுள்ளது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் அரசுக்கு எதிராக உள்ளதால் முதல்வர் அசோக் கெலாட் தனது அரசை தக்கவைக்க போராடி வருகிறார். காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 100 பேர் ஜெய்ப்பூரில் உள்ள பேர்மவுண்ட் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உண்மை நம்மோடு உள்ளது உண்மை வெல்லும்… காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கையூட்டிய அசோக் கெலாட்

நேற்று அந்த சொகுசு விடுதியில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா்களின் 3வது கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அசோக் கெலாட் பேசியதாவது: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பாதுகாப்பாக உள்ளது. ராஜஸ்தான் அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடுகிறது அதேசமயம் கிளர்ச்சிக்கு எதிராகவும் போராடுகிறது. உண்மை நம்மோடு உள்ளது உண்மை வெல்லும்.

உண்மை நம்மோடு உள்ளது உண்மை வெல்லும்… காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கையூட்டிய அசோக் கெலாட்

சச்சின் பைலட் தனது சொந்த அரசையே கவிழ்க்க முயற்சி செய்தார். துரோகிகளால் வாக்காளர்களை எதிர்கொள்ள முடியாது. சட்டமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற வேண்டும் என்று காங்கிரஸோ, பா.ஜ.க.வோ விரும்பவில்லை. நீங்கள் போராடும் வழியை முழு நாடும் கவனித்து வருகிறது. உங்கள் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இது சாதரணமான ஒன்றல்ல. உங்கள் அனைவரிடமும் தொலைப்பேசிகள் உள்ளன. யாருக்கும் எந்த அழுத்தமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.