Home இந்தியா இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க "மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்"

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க “மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்”

மக்களையும் பூமியையும் காப்பாற்றுவதற்குகு கிடைத்த மிக முக்கியமான ஆயுதம்தான் மரம். மனிதனுக்கு உயிர் எந்தளவு முக்கியமோ, அதேபோல் அந்த மனிதன் வாழ்வதற்கு மரமும் முக்கியம். ஆனால் அந்த மரங்களைப் போற்றி பாதுகாக்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. மாறாக மரங்கள் வெட்டப்படுவதும், காடுகள் அழிக்கப்படுவதுமே தொடர்கதையாகி வருகிறது. இதனை மீட்டெடுக்க மரங்களை நடுவதே தீர்வாக அமையுமென்று மக்கள் நம்புகின்றனர். யார் வேண்டுமானாலும் வெளியே சென்று ஒரு மரத்தை நட்டுவிடலாம், ஆனால் பல ஆண்டுகள் பழைமையான மரங்களைக் காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க "மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்"
இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க "மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்"

இயற்கையின் சுழற்சியால் 1000 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் பழைமையான மரங்கள் அழிந்துவருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தடுக்க மும்பை மாநகராட்சி ஒரு தனித்துவமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. மும்பையில் பழைய மரங்கள் விழுவதைக் கவனிக்கவும், பாதிக்கப்படக்கூடிய மரங்களை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றவும் மும்பை மாநகராட்சி மரத்திற்கென்று பிரத்யேகமான அறுவைச் சிகிச்சை நிபுணர்களை (arborist) நியமித்துள்ளது.

Tree Care: Landscapers vs. ISA Certified Arborists | Green Forest Blog

இந்த நிபுணர்கள் மரத்தில் பூஞ்சை தொற்று ஏதும் உள்ளதா, வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்வார்கள். மேலும் அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிகளையும் மாநகராட்சிக்குப் பரிந்துரைப்பார்கள். மும்பையில் மலபார் மலை, டார்டியோ, பெடார் சாலை போன்ற இடங்களை உள்ளடக்கிய மாநகராட்சி டி-வார்டின் நிபுணராக வைபவ் ராஜே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பகுதிகளிலுள்ள 100-150 மரங்களை ஆய்வு செய்வார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மரங்களின் இழப்பைக் குறைக்கலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

Image

இதுகுறித்து ராஜே கூறுகையில், “வெள்ளம் ஏற்படும்போதோ பலத்த மழை பெய்யும்போதோ அல்லது வேறு காரணங்களால் கூட மரங்கள் பாதிக்கப்படுகின்றன. பூஞ்சை தொற்று, தளர்வான வேர்கள் காரணமாகக் கூட பாதிப்பைச் சந்திக்கின்றன. மரங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும், அவற்றை முன்கூட்டியே கண்டறிவது தான் எங்களின் வேலை. இதற்காக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மரம் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முக்கியத்துவத்தை மக்கள் இப்போது உணர்ந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக… அழிந்துவரும் மரங்களை பாதுகாக்க "மர அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்"
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓடிப்போன மகள் -தேடிப்போன தந்தை -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

மகள் வேறு சாதியை சேர்ந்தவரை கல்யாணம் செய்து கொண்டதால் கோபமுற்ற தந்தை அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது .

உளவு விவகாரம்.. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை… மத்திய அரசை விமர்சனம செய்த சிவ சேனா

ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை என்று மத்திய அரசை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ்...

வந்த வழியே சுகரை ஓட வைக்க இந்த ஜூஸை வெறும் வயித்துல குடிங்க

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகள் திருடர்களா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews