2021 ஜனவரியில் மட்டும் 17.32 லட்சம் வாகனங்கள் விற்பனை… புத்தாண்டில் நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை

2021 ஜனவரியில் மட்டும் 17.32 லட்சம் வாகனங்கள் விற்பனை… புத்தாண்டில் நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை

2021 ஜனவரியில் பைக்,கார் உள்பட 17.32 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் சுமார் 5 சதவீதம் அதிகமாகும்.

பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் போன்ற காரணங்களால் 2020ம் ஆண்டில் வாகன விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் வாகன தயாரிப்பாளர்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்தனர். இதனால் 2021ம் ஆண்டிலாவது வாகன விற்பனை சூடு பிடித்து நம்மை காப்பாற்றி விடாதா என்று எதிர்ப்பார்ப்பில் வாகன தயாரிப்பாளர்கள் இருந்தனர். புத்தாண்டு அவர்களை கைவிடவில்லை. இந்த முதல் மாதமான கடந்த ஜனவரியில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது.

2021 ஜனவரியில் மட்டும் 17.32 லட்சம் வாகனங்கள் விற்பனை… புத்தாண்டில் நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை
கார் மாடல்கள்

இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி: 2021 ஜனவரியில் பைக், கார், வர்த்தக வாகனங்கள் என ஒட்டு மொத்த அளவில் மொத்தம் 17.32 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 4.97 சதவீதம் அதிகமாகும். 2020 ஜனவரியில் மொத்தம் 16.50 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது.

2021 ஜனவரியில் மட்டும் 17.32 லட்சம் வாகனங்கள் விற்பனை… புத்தாண்டில் நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை
கார் மாடல்கள்

கடந்த ஜனவரியில் இரு சக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்) டீலர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது 6.63 சதவீதம் உயர்ந்து 14.29 லட்சமாக உயர்ந்துள்ளது. 3 சக்கர வாகனங்கள் விற்பனை 56.76 சதவீதம் குறைந்து 26,335 வாகனங்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதேசமயம் பயணிகள் வாகனங்கள் விற்பனை 11.14 சதவீதம் ஏற்றம் கண்டு 2.76 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. 2020 ஜனவரியில் 2.48 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.