விற்பனையில் சறுக்கிய மாருதி…. கெத்து காட்டிய அசோக் லேலண்ட்

 

விற்பனையில் சறுக்கிய மாருதி…. கெத்து காட்டிய அசோக் லேலண்ட்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த நவம்பரில் சரிவு கண்டுள்ளது. அதேசமயம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்ததக வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 1.35 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 2.4 சதவீதம் குறைவாகும். 2019 செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 1.39 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது.

விற்பனையில் சறுக்கிய மாருதி…. கெத்து காட்டிய அசோக் லேலண்ட்
மாருதி சுசுகி

இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் 2020 நவம்பர் மாதத்தில் மொத்தம் 10,659 கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும். 2019 நவம்பர் மாதத்தில் மொத்தம் 10,175 வர்த்தக வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

விற்பனையில் சறுக்கிய மாருதி…. கெத்து காட்டிய அசோக் லேலண்ட்
அசோக் லேலண்ட் வாகனம்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று மாருதி சுசுகி இந்தியா நிறுவன பங்கின் விலை 1.03 சதவீதம் அதிகரித்து ரூ.7,099.10ஆக உயர்ந்தது. அசோக் லேலண்ட் நிறுவன பங்கின் விலை 0.54 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.92.60-ல் முடிவுற்றது.