தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்.. பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக ரூ.750 கோடி குவிந்தது

தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்.. பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக ரூ.750 கோடி குவிந்தது

தொடர்ந்து 7வது ஆண்டாக கடந்த 2019-20ம் நிதியாண்டில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடை அதிகம் பெற்ற கட்சியாக பா.ஜ.க. முதலிடத்தில் உள்ளது.

நிறுவனங்கள், தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் பெற்ற ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் 2019-20ம் நிதியாண்டில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு அளித்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்பித்து உள்ளன.

தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்.. பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக ரூ.750 கோடி குவிந்தது
இந்திய தேர்தல் ஆணையம்

இதன்படி, தொடர்ந்து 7வது ஆண்டாக 2019-20ம் நிதியாண்டில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடை அதிகம் பெற்ற கட்சியாக பா.ஜ.க. உள்ளது. அந்த கட்சி அந்த நிதியாண்டில் நன்கொடையாக மொத்தம் சுமார் ரூ.750 கோடி பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகமாகும். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தாங்கள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளன

தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்.. பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக ரூ.750 கோடி குவிந்தது
காங்கிரஸ்

காங்கிரஸ் – ரூ.139 கோடி
தேசியவாத காங்கிரஸ் – ரூ.59 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் – ரூ.8 கோடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – ரூ.19.6 கோடி
இந்திய கம்யூனிஸ்ட் – ரூ.1.9 கோடி