• July
    17
    Wednesday

Main Area

Main



ஃபார்வேர்ட் மெசேஜ் அனுப்பாதீங்கன்னா கேட்டாதானே? இப்ப பாருங்க இம்ரான் அவஸ்தையை!

Imran
Imran
Loading...

பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என பத்து பதினைந்து ஆண்டுகளாகவே கடுமையாக போராடிய இம்ரான்கானுக்கும் ஆட்சி கையில் கிடைத்தது. கிடைத்தவுடன்தான் பாகிஸ்தானில் ஆட்சி என்பது ஆசி அல்ல, அது சாபம் என்பதை கண்டுகொண்டார். ஆனாலும் நாயர் புலிவாலை பிடித்துவிட்டார். விடமுடியாதே. நிர்வாகத்தை சீர்தூக்க எல்லாப்பக்கமும் கையேந்துகிறார். இந்த உளைச்சல் அவரை என்னவோ செய்துவிட்டது. இப்போதெல்லாம் அடிக்கடி தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிவிடுகிறார்.

Imran at SCO meet

கடந்தவாரம் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புரோட்டாகால்படி எல்லாரும் நிற்கவேண்டிய நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இம்ரான், தனது சீட்டில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். அதேபோல், சவுதி அரசருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, மொழிபெயர்ப்பாளரிடம் விஷயத்தை சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்ததும் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டது. இப்போது இன்னொருதடவை கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்.

Imran Khan

தினமும் ட்விட்டரில் வாட்சப்பில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும்போது, கையில் முதலில் கிடைக்கும் ஃபார்வேர்ட் மெசேஜை ஃபார்வேர்ட் தட்டிவிடும் கெட்டபழக்கம் இம்ரானுக்கும் இருக்கும் போலிருக்கிறது. அப்படித்தான் ஒரு டிவீட்டை அவர் போட்டுவிட்டு இப்போது படாதபாடுபடுகிறார். “யாரேனும் ஞானத்தை புரிந்துகொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கலீல் ஜிப்ரானின் (லெபனான் நாட்டு கவிஞர்) வார்த்தைகள் வழி வகுக்கும்” என்று கூறி “வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று இரவில் கனவு கண்டேன், ஆனால் விழித்துப் பார்த்தபோது வாழ்க்கை ஒரு சேவை என்பதை புரிந்துகொண்டேன். சேவையே மகிழ்ச்சி என்பதை நான் உணர்ந்தேன்” என்ற கவிதை வரிகளை பதிவு செய்திருந்தார். ஆக்ச்சுவலா இது கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடையது. கன்டென்ட் கிடைத்துவிட்டது என நெட்டிசன்கள் இம்ரானை நொட்டித் தள்ளுகிறார்கள்!

2018 TopTamilNews. All rights reserved.