இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த 5 வழிகள்!

 

இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த 5 வழிகள்!

எப்போதும் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல், டி.வி பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வைத் திறன் பாதிப்படைகிறது. கண்களை இமைக்காமல் ஒளிர் திரையைப் பார்க்கும்போது கண்கள் வறண்டு போகின்றன. கண்ணுக்குத் தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு கண் எரிச்சல், கண் சிவத்தல் உள்ளிட்டவை தொடங்கி பார்வை குறைபாடு வரை பல பாதிப்புகள் வரிசை கட்டுகின்றன. இதைத் தவிர்க்க தினசரி சில எளிய பயிற்சிகளை செய்தாலே போதும். பார்வை திறன் மேம்படும்.

இயற்கையான முறையில் கண் பார்வையை மேம்படுத்த 5 வழிகள்!

கண்களை கதகதப்பாக்குங்கள்… கைகளை நன்கு தேய்த்து உள்ளங்கையைக் கண்களின் மீது சில நொடிகள் வைக்க வேண்டும். இப்படி 5, 6 முறை செய்யலாம். இது கண்களின் சோர்வை நீக்கும். கண்கள் புத்துணர்வு பெறும்.

கடிகார முள் சுற்றுவது போல கண்களை நன்கு சுழற்றுங்கள். பிறகு எதிர்த்திசையில் கண்களைச் சுழற்றுங்கள். இப்படி நேரம் கிடைக்கும் போது எல்லாம் 5-6 முறை செய்யலாம்.

நேராக நிமிர்ந்து அமர்ந்து, கண்களை ஒரு சில விநாடிகளுக்கு நன்கு இமையுங்கள். பிறகு சில விநாடிகள் கண்களை மூடியிருங்கள். பிறகு மீண்டும் கண்களை நன்கு திறந்து இமையுங்கள். இப்படி செய்வதன் மூலம் கண்களின் வறட்சி நீங்கும். பார்வை நரம்புகள் வலுப்படும்.

நீண்ட நேரம் லாப்டாப், மொபைலை பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணில் வறட்சி ஏற்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு அளியுங்கள். 10 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளையும் உங்கள் கை அல்லது வேறு பொருளை மாறி மாறி பாருங்கள். சில விநாடிகள் கழித்து கண்களை நன்கு மூடுங்கள். பிறகு மீண்டும் அருகில் உள்ள உங்கள் கை தொலைவில் உள்ள வேறு ஒரு பொருளை மாறி மாறி பாருங்கள். இப்படிச் செய்யும் போது கண்களின் தசைகள் வலுப்பெறும். பார்வை திறன் மேம்படும்.

20 – 20 – 20 விதி: தொடர்ந்து கம்ப்யூட்டர், மொபைல் ஒளிர் திரையைப் பார்க்காதீர்கள். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்கு பாருங்கள். பசுமையான தாவரங்கள். செடி, இலைகளைப் பார்க்கும் போது கண்கள் புத்துணர்வு பெறும்.