ஆச்சரியப்பட வைக்கும் அன்னாசி பழத்தின் பலன்கள்!

 

ஆச்சரியப்பட வைக்கும் அன்னாசி பழத்தின் பலன்கள்!

மிகவும் சுவையான, எளிதில் செரிமானம் ஆகும் பழம் அன்னாசி. சிறிது சாப்பிட்டாலும் பயிறு நிறைந்த உணர்வைத் தரும். ஆண்டு முழுவதும் கிடைக்கும் அன்னாசி பழத்தின் மகத்துவத்தைப் பார்ப்போம்!

ஒரு கப் (தோராயமாக 165 கிராம்) அன்னாசி பழத்தில் 82.5 கலோரி, 1.7 கிராம் கொழுப்பு, 1 ஒரு கிராம் புரதம், 21.6 கிராம் கார்போஹைட்ரேட், 2.3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாள் தேவையில் 131 சதவிகிதம் வைட்டமின் சி, 76 சதவிகிதம் மாங்கனீசு, 9 சதவிகிதம் பி6, தாமிரம், தயாமின், 7 சதவிகிதம் ஃபோலேட், 5 சதவிகிதம் பொட்டாசியம், மக்னீஷியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது தவிர குறிப்பிடத்தகுந்த அளவில் வைட்டமின் ஏ, கே, பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

ஆச்சரியப்பட வைக்கும் அன்னாசி பழத்தின் பலன்கள்!

இவ்வளவு சத்துக்கள் கொண்டதாலேயே பல நோய்களை எதிர்க்கும் பழமாக அன்னாசி விளங்குகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் நிகழும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரெஸ் பாதிப்பை போக்குகிறது. இதனால் செல்களில் வீக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பாதிப்புகள் நீங்குகிறது.

அன்னாசி பழத்தில் செரிமானத்தைத் தூண்டும் எண்ணற்ற நொதிகள் உள்ளன. நம்முடைய உடலின் செங்கல் போன்றது தசைகள். அவற்றுக்கு புரதச்சத்து அதிக அளவில் தேவை. அன்னாசி பழத்தில் உள்ள நொதிகள் உணவில் உள்ள புரதத்தை உடைத்துக் கொடுக்கிறது. அதை நம்முடைய சிறுகுடல் எளிதில் கிரகிக்கின்றன.

நம்முடைய உடலில் வளரும் இயல்புக்கு மீறிய செல்களின் பெருக்கம்தான் புற்றுநோயாக மாறுகிறது. இந்த செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் அன்னாசி பழத்துக்கு உள்ளது. இதில் உள்ள bromelain எனப்படும் என்சைம் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுக்க கோடிக் கணக்கான மக்கள் எலும்பு மூட்டு வீக்கம் எனப்படும் ஆர்த்ரைடிஸ் நோயால் அவதியுறுகின்றனர். இந்த வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அன்னாசிக்கு உண்டு. இதில் உள்ள bromelain ரசாயனத்தைத்தான் ஆர்த்ரைடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு தயாரிக்கப்படும் வலி நிவாரணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அன்னாசி பழத்தை தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு குறையும். நார்ச்சத்து மிக்கது என்பதால் மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும்.

உடல் எடையைக் குறைக்க, தொப்பையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த பழத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

இது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதால் கருத்தரித்த ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்!