Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் பீட்ரூட்டின் ஆச்சரியமூட்டும் 8 மருத்துவ பலன்கள்!

பீட்ரூட்டின் ஆச்சரியமூட்டும் 8 மருத்துவ பலன்கள்!

பீட்ரூட்டை முதன் முதலில் ரோமானியர்கள் விளைவித்தார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு உலகின் எல்லா நாடுகளிலும் பீட்ரூட் பயன்பாடு உள்ளது. பீட்ரூட்டில் நார்ச்சத்து, ஃபோலேட் (வைட்டமின் பி9), மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது என பல நன்மைகளை இது தருகிறது.

பீட்ரூட்டில் உள்ள இன்ஆர்கானிக் நைட்ரேட் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் காக்கிறது. மேலும் நைட்ரிக் ஆக்சைட் படிவதைத் தடுக்கிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் 3-10 எம்எம் எச்.ஜி அளவுக்கு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1) இதில் உள்ள செரிமானம் ஆகக் கூடிய நைட்ரேடஸ் அதிக உடல் உழைப்பை எதிர்கொள்ளச் செய்கிறது. எனவேதான், தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் பீட்ரூட் ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது. செல் அளவில் ஆற்றல் கிடைக்க நைட்ரேட்ஸ் அவசியம்.

2) இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தைச் சீர்படுத்துகிறது. ஒரு கப் பீட்ரூட்டில் 3.4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. உணவு செரிமானமாகி வெளியேற உதவுவதுடன் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு நன்மை செய்கிறது. மலச்சிக்கல், செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

3) வயது அதிகரிக்க அதிகரிக்க மூளை நரம்பு மண்டலத்தின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். மூளைக்கான ரத்த ஓட்டம் குறையும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் ரத்தக் குழாய்களை தளர்வுரச் செய்து மூளைக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

4) சில வகையான புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை பீட்ரூட் தடுக்கிறது. மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடண்டாக இது செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

5) உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பீட்ரூட் சிறந்த உணவு. இதில் கலோரி குறைவு, நீர்ச்சத்து அதிகம். குறைந்த கலோரி கொண்ட காய்கறிகளை அதிக அளவில் எடுப்பதன் மூலம் உடல் எடை குறைப்பு விரைவுபடுத்தப்படும்.

6) இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் உணவு செரிமானம் ஆகி உடனடியாக ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

7) ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியம். நம்முடைய உடல் இரும்புச் சத்தை கிரகிக்க வைட்டமின் சி தேவை. இந்த இரண்டும் பீட்ரூட்டில் உள்ளது. எனவே, பீட்ரூட் ரத்த சோகை பாதிப்பைத் தடுக்கிறது.

8) பீட்ரூட்டில் கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகேயுள்ள...

“ஓட்டுக்கு காசு கொடுக்க வாக்காளர்களின் பேங்க் புக்கை வாங்கும் அதிமுக”

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் திமுக சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்....

’’இந்தப் பொம்மைகளின் பெயர்களைச் சரியாகச் சொல்பவர்களுக்கு பரிசு உண்டு’’

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன் தினம் விழுப்புரத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிவிட்டு சென்னை திரும்பி வரும்போது, மதுராந்தகத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்டார்....

தேமுதிக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை: நள்ளிரவில் பயங்கரம்!

சென்னை அருகே நள்ளிரவில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (36),...
TopTamilNews