தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் பளபளப்பாகுமாம்!

 

தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் பளபளப்பாகுமாம்!

எந்த ஒரு சீசனிலும் கிடைக்கும் ஜூஸ்களில் ஒன்று கேரட். பார்வைத் திறன், சரும பாதுகாப்பு என்று இதன் நன்மைகள் லிஸ்ட் பெரியது. பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ என்று இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன. தினமும் கேரட் ஜூஸ் குடித்தல் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்!

தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் சருமம் பளபளப்பாகுமாம்!

கேரட்டில் அதிக அளவில் வைட்டமின் ஏ உள்ளது. ஒரு கப் கேரட் ஜூஸ் குடித்தால் போதும் அதிலிருந்து மட்டும் ஒரு நாள் தேவையைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வைட்டமின் ஏ கிடைத்து விடும். வைட்டமின் ஏ கண்களை பாதுகாக்கும் வைட்டமின் என்பதை நாம் அறிவோம். இதன் காரணமாக பார்வைக் குறைபாடு மற்றும் வயோதிகத்தால் கண்ணில் ஏற்படக்கூடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு செல்களில் ஏற்படக்கூடிய ஃப்ரீ ராடிக்கல் பாதிப்பைப் போக்குகின்றன. ஒரு கப் கேரட் ஜூஸில் ஒரு நாள் தேவையில் 30 சதவிகிதம் அளவுக்கு வைட்டமின் பி6 கிடைத்துவிடுகிறது. இந்த வைட்டமின்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கேரட் உதவுகிறது.

சில வகையான புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கேரட் ஜூசுக்கு உள்ளது. பீட்டா கரோட்டின், லூடின், polyacetylenes போன்ற சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகின்றன. பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரத்த மார்க்கர் உள்ள இளைஞர்களுக்கு தொடர்ந்து கேரட் ஜூஸ் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டு வாரம் கழித்து அவர்களது ரத்த பரிசோதனையை செய்த போது பெருங்குடல் புற்றுநோய் மார்க்கர் மறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது.

சர்க்கரை சேர்க்காமல் கேரட் ஜூஸ் தயாரித்து அருந்துவது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க துணை செய்கிறது. கேரட் ஜூஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. கேரட் ஜூஸின் கிளைசமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவாக உள்ளது. இதன் காரணமாக ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவின் வேகம் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் கேரட் ஜூஸை அளவோடு அருந்த வேண்டும். அதிகமாக அருந்தினால் அதுவே சர்க்கரை அளவு அதிகரிக்கக் காரணமாகிவிடலாம்.

ஒரு கப்பில் 20 சதவிகிதம் அளவுக்கு வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. நீரில் கரையக் கூடிய வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. சருமத்தின் தசை நார் புரதத்தைக் காத்து சருமத்துக்கு எலாஸ்டிசிட்டியைத் தருகிறது. வைட்டமின் சி ஃப்ரீ ராடிக்கல் பாதிப்பில் இருந்து சருமத்தைக் காக்கிறது.

காரட் ஜூஸில் உள்ள கரோட்டினாய்ட்ஸ் சூரியனிலிருந்து வரும் புற ஊதக் கதிர் வீச்சால் வரக் கூடிய பாதிப்பைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் உள்ளிட்டவை சரும செல்கள் இழப்பைத் தடுத்து சருமம் இளமையாக இருக்க உதவி செய்கின்றன. தினமும் கேரட் ஜூஸை அருந்தி வந்தால் சருமம் இளமையாக பொலிவுடன் இருக்கும், முதுமையைத் தள்ளிப்போடலாம்.