முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

 

முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

கேரள அரசு புதிய தளர்வுகளை அறிவித்ததன் படி இன்று முதல் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த பிறகும் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் குறையவில்லை. கொரோனா வைரஸ், ஜிகா வைரஸ் என அடுத்தடுத்து பரவிய வைரஸ் பாதிப்புகள் கேரளாவுக்கு பெரும் நெருக்கடியை தந்தது. நாட்டிலேயே அதிகம் பாதிப்பு பதிவாகும் மாநிலமாக கேரளா இருந்தது. தற்போதும் அதே நிலை நீடிக்கிறது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கேரள அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.

முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

ஓணம் பண்டிகைக்காக வணிக வளாகங்கள் 19ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கேரள அரசு அறிவித்த புதிய தளர்வுகளின் படி இன்று முதல் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

முக்கிய சுற்றுலாத் தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு!

கடந்த மே மாதம் 8ம் தேதியில் இருந்து கேரளாவில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சுற்றுலாத்துறையில் மட்டும் ரூபாய் 30,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டும் பாதிப்பு குறைவதாலும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதாக தெரிவித்துள்ள கேரள அரசு, பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பயணிகள் கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது. நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் அனுமதி இல்லை. சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி இரண்டு வாரங்கள் ஆகி இருக்க வேண்டும். அதோடு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.