அண்ணா பல்கலைக்கழகத்தில்… உதயநிதிக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில்… உதயநிதிக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி பெற்றது அரசியல் கட்சியினரை திரும்பிப் பார்க்க வைத்தது. முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்ணா பல்கலைக்கழகத்தில்… உதயநிதிக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

ஆட்சியில் தந்தை – மகன் உறவெல்லாம் கிடையாது என்பதை நிரூபித்துக் காட்டினார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்கவில்லை. மாறாக திமுகவின் மூத்த உறுப்பினர்களையும் தகுதி வாய்ந்த உறுப்பினர்களையும் அமைச்சராக்கினார். உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனினும் வருங்காலத்தில் முக்கிய பதவிகள் பல கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அப்போதே பேச்சுக்கள் எழுந்தது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் சபாநாயகர் அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி மூன்று ஆண்டுகள் இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வனும் அண்ணா பல்கலை. ஆட்சி மன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏக்கள் ஈஸ்வரன் மற்றும் கணேஷ் ஆகியோர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.