‘பெண்களை மாய வலையில் வீழ்த்தி ஏமாற்றிய காசி’… சிபிசிஐடி விசாரணையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

‘பெண்களை மாய வலையில் வீழ்த்தி ஏமாற்றிய காசி’… சிபிசிஐடி விசாரணையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாசப் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்தார். இவரைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போலப் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களைக் காட்டி அவர்களது அம்மாக்களையும் அடிபணிய வைத்திருக்கிறார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

‘பெண்களை மாய வலையில் வீழ்த்தி ஏமாற்றிய காசி’… சிபிசிஐடி விசாரணையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

அதன் பின்னர், காசியின் வலையில் விழுந்த பெண் மருத்துவர் இவர் அழைத்து வரும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததும், சிறுமிகளைக் கூட விட்டு வைக்காமல் காசி பழகி வந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனைத்தொடர்ந்து காசி வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ளக் காசியையும் அவரது நண்பரையும் 5 நாட்கள் காவலில் எடுத்தனர்.

‘பெண்களை மாய வலையில் வீழ்த்தி ஏமாற்றிய காசி’… சிபிசிஐடி விசாரணையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

அச்சமயம் போலீசார் காசியின் வீட்டில் சோதனை செய்ததில், 3 செல்போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் ஒன்று சிக்கியுள்ளது.அதுமட்டுமில்லாமல் காசியின் அறையிலிருந்து சில முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும், பெண்களை மாய வலையில் வீழ்த்தி அவரது காரில் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடரும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.