‘பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள்’ வேளாண் சட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை!

 

‘பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள்’ வேளாண் சட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்த ‘டெல்லி சலோ’ போராட்டம் நாளுக்கு நாள் வலுபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம், தற்போது வரை நிறைவு பெற்றதாக இல்லை. மத்திய அரசுடன் விவசாய அமைப்புகள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததே இதற்கு காரணம். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே உணவு சமைத்து, பல நாட்களாக விவசாயிகள் போராட்டத்தை தொடருகின்றன.

‘பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள்’ வேளாண் சட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை!

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், 2 முறை ஆலோசனை நடத்தப்பட்டு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது எந்த பலனையும் அளிக்கவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர் , பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வேளாண் சட்டங்கள் குறித்து திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், அந்த சட்டங்கள் குறித்து விவசாயிகள் எழுப்பிய கேள்விகள் குறித்து விவாதிக்கப் படுவதாக தெரிகிறது.