நகைக்கடன் தள்ளுபடி : பட்ஜெட்டில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

 

நகைக்கடன் தள்ளுபடி : பட்ஜெட்டில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருந்தது. அதற்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கி மூலம் வழங்கப்பட்ட விவசாய கடன், குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பின் படி விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் கடனில்லா சான்றுகளை வழங்கின.

நகைக்கடன் தள்ளுபடி : பட்ஜெட்டில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

ஆனால் நகைகளை திரும்பி வழங்கவில்லை என்ற புகார் எழுந்தது. இது குறித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி நகை கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 3 நிதியாண்டுகளில் வழங்கிய நகைக் கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

அதாவது, 2018 -19, 2019 -20, 2020 -2021 நிதியாண்டில் பெறப்பட்ட நகைக்கடன் விவரங்களை கேட்டுள்ளது. திமுக தலைமையிலான தமிழக அரசின் பட்ஜெட் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதில் நகைக் கடன் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.