கடும் அமளிக்கிடையிலும் வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

கடும் அமளிக்கிடையிலும் வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, சர்ச்சைக்குரிய வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

கடும் அமளிக்கிடையிலும் வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட
மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கடும் அமளிக்கிடையிலும் வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

மக்களவையில் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது போலவே மாநி்லங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதால், அவசர கதியில் அள்ளித்தெளித்த கோலம் என்று எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

கடும் அமளிக்கிடையிலும் வேளாண் திருத்தச்சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்