இம்யூனிட்டி பவர் வேணும்னா கொஞ்சம் இப்படியும் சாப்பிடுங்க

 

இம்யூனிட்டி பவர் வேணும்னா கொஞ்சம் இப்படியும் சாப்பிடுங்க

இம்யூனிட்டி பவர் வேணும்னா கொஞ்சம் இப்படியும் சாப்பிடுங்க

நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன . இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச் சத்துக்கள் அதிகம் உள்ளது. பழங்கள் உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

பெர்ரி பழங்கள் சத்தான உணவு. புளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது.

புளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால் இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள குளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.அதனால் இந்த வைரஸ் காலத்தில் நம் இம்யூனிட்டி பவரை அதிகரிக்க அப்பப்ப இப்படி பச்சையாக சாப்பிடுவோம் .