நூறு வயசு வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தியோடிருக்க வெறும் நூறு ரூபாய் போதும்

 

நூறு வயசு வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தியோடிருக்க வெறும் நூறு ரூபாய் போதும்

இப்போது, ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக்கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். அதனால், முடிந்தவரை கீழே குறிப்பிட்ட உணவுகளில் ஒரு நாளில் ஒன்றிரண்டாவது எடுத்துக்கொள்ளுங்கள

பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே இருக்கும். இவை குறையும் போது உடலில் நோய்த்தொற்றுகள் எளிதாக தொற்றும்.

அதிக சோர்வு, தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல், ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண், அழற்சிகள், காயங்கள் ஆற நாளாகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதிலும் தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதிலும் முக்கிய பங்கு உணவுக்கு உண்டு.

அந்தவகையில் ஆயுர்வேத முறையில் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த உணவுகள், இலைகள், கீரைகள், வண்ண நிறங்கள் அடங்கிய பழங்கள், ப்ரக்கோலி, தக்காளி, எலுமிச்சை, காலிஃபள்வர், இனிப்பு உருளைக்கிழங்கு, கேப்சிகம், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா கிவி, விதைகள், கொட்டைகள், பருப்பு வகைகள் போன்றவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நூறு வயசு வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தியோடிருக்க வெறும் நூறு ரூபாய் போதும்

 உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், சூடான அல்லது குளிர்ந்த உணவு, உலர்ந்த அல்லது புளித்த உணவு போன்றவற்றை இயன்றவரை அதிகம் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

 தினசரி உணவில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் நச்சை குறைக்கவும் இது உதவும். மஞ்சளை பாதாம் பாலுடன் சேர்த்து குடிக்கலாம். காலை நேரத்தில் ஓட்ஸில் மஞ்சள் சேர்த்தும் குடிக்கலாம்.தினமும் நெல்லிக்காய் சாறு 15 மில்லி அளவு எடுத்துகொள்ளலாம்.

தவறாமல் உடற்பயிற்சி செய்வது உடலை கச்சிதமாக வைத்திருக்க உதவும். சைக்கிள் ஓட்டுவது, விறுவிறுப்பான நடைபயிற்சி,யோகா, நீச்சல், விளையாட்டு, ஜாகிங் போன்ற மிதமான பயிற்சிகளை செய்ய்லாம்.

தயிர்
தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லி, ஓட்ஸ்
பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.