உரு மாறும் கொரானாவுக்கு பரு மாதிரி கிள்ளியெறிய உதவும் சிறு தானிய உணவுகள்

 

உரு மாறும் கொரானாவுக்கு பரு மாதிரி கிள்ளியெறிய உதவும் சிறு தானிய உணவுகள்

கொரோனா வைரஸ் – கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது இது தான். இப்போது கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

அதேநேரம் கொரோனா வேக்சின் உற்பத்தியும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதனால் பல்வேறு நாடுகளிலும், கொரோனா வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

உரு மாறும் கொரானாவுக்கு பரு மாதிரி கிள்ளியெறிய உதவும் சிறு தானிய உணவுகள்

அதனால் இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பை உருவாக்கும் இந்த சிறு தானிய உணவுகள்.உடலுக்குத் தேவையான சக்தியை கொடுப்பதிலும், வைட்டமின், மினரல் போன்ற நுண் ஊட்டச்சத்தை வாரி வழங்குவதிலும் இவை அரிசியை விட சிறு தானிய உணவுகள் 100% மேல். இதனால், வயிறுமுட்ட உண்டால் தான் நல்ல செரிமானம், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும் எனும் எண்ணத்தை முதலில் நாம் மாற்றிக்கொள்வது அவசியம்.

முதலில் வறுத்த தானியங்களை இனிப்பு வடிவில் (லட்டு) கொடுத்து, பின்பு மெல்ல கஞ்சியாகவும், உப்புமாவாகவும், இட்லி தோசை மாவுடன் கலந்தும் புகட்டலாம். இன்னும் எளிமையாய் தருவதானால், சோளப் பொரியை வழக்கமான நொறுக்குத் தீனிக்குப் பதில் கொடுக்க முடியும். இதன் அதிக நார்சத்தும், புரதமும் குழந்தையின் உடலுக்கு நன்மையே!தினை பொதுவாகவே, புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவு. இவை வளரும் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியம். ஆதலால், தினையை குழந்தைகள் விரும்பும் வண்ணம், இனிப்புக் கஞ்சியாக குழைத்து நாட்டு சர்க்கரை கலந்து ஊட்டலாம்.

உரு மாறும் கொரானாவுக்கு பரு மாதிரி கிள்ளியெறிய உதவும் சிறு தானிய உணவுகள்

சாமை, வரகு, குதிரவாலி, தினை (Husked Grains) ஆகியவை நெல் அரிசியைப் போன்ற தன்மை உடையது. அரிசியை சமைத்து உபயோகப்படுத்தும் அதேமுறையில் பயன்படுத்த முடியும். இவற்றை சமைப்பதற்கு முன், 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்க வேண்டும். சமயத்தில் கல், மண் இருந்தால் நீக்கிக் கொள்ளவும்.

எலுமிச்சை, புதினா, புளியோதரை, தேங்காய், தக்காளி என அனைத்து கலந்த சாதங்களையும்இவற்றில் செய்ய முடியும். தோசை, சப்பாத்தி, அடை செய்வதற்கு ராகி, கம்பு, சோளம் (De- Husked Grains) ஏற்றவை.

நாம் சாதாரணமாக அரைக்கும் (நெல் அரிசியிலான) இட்லி தோசை மாவுடனும், பிசையும் (கோதுமையிலான) சப்பாத்தி மாவுடனும், எந்த சிறுதானிய மாவையும் வேண்டிய அளவு சேர்த்துக்கொள்ளலாம்.

செரிமான தொந்தரவு, மந்தம் ஏற்படுமா?

அறிவியல் ரீதியாய் இதுவொரு தவறான நம்பிக்கை. பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் நார்சத்து இல்லாததால் அளவில் அதிகமாக உட்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, வயிறுமுட்ட உண்டால் மட்டுமே போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிறு தானியங்களின் நன்மை பயக்கும் அதிக நார்ச்சத்து, அளவில் குறைவாக உண்டாலே முழுமையை ஏற்படுத்தும். நீண்ட நேரம் பசியைத் தாங்கக் கூடிய தன்மையையும் அளிக்கும். இதைச் செரிமான மந்தம் என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.

இவற்றில் அமிலத்தன்மை (Acidity) குறைவு, காரத்தன்மை (Alkaline Foods) அதிகம் என்பதால், உள்ளபடி மற்ற உணவுகளை விட இவை எளிமையாய் செரிமானமாகக் கூடியவை என்பதே உண்மை. மேலும், உடல் உழைப்பு என்றால் என்ன என்பது கூட அறியாத தலைமுறையாய் மாறிவரும் நமக்கு, உட்கொள்ளும் அளவைக் குறைத்தும், சத்திலும் சக்தியிலும் மிகுந்து காணப்படும் சிறு தானியங்கள், சந்தேகமே இல்லாமல் ஒரு வரப்பிரசாதமே!