எந்த இடங்களில் மின்தடை என தெரிவித்தால் உடனடி நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

எந்த இடங்களில் மின்தடை என தெரிவித்தால் உடனடி நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

மின்தடை குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

எந்த இடங்களில் மின்தடை என தெரிவித்தால் உடனடி நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

தமிழகத்தில் மின்தடை ஆங்காங்கே இருந்து வருகிறது. இது குறித்து ஏற்கனவே அறிவித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதால், மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புக்கள் தேர்வுகள் நடப்பதாலும் , தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் முடியும் வரை மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை ; இதனால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்ட பிறகு பராமரிப்பு பணிகள் தொய்வின்றி நடக்கும் என்றார்.

எந்த இடங்களில் மின்தடை என தெரிவித்தால் உடனடி நடவடிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

இந்நிலையில் எந்த இடங்களில் மின்தடை ஏற்பட்டது என தெரிவித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் . மின்தடை ஏற்படக்கூடாது என்ற முதல்வர் அறிவுறுத்தலின்படி மின்வாரியம் செயல்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.