48 மணி நேரத்தில் 6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

 

48 மணி நேரத்தில் 6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அவை ஒடிசா, வடக்கு கடலோர ஆந்திரம், விதர்பா, கங்கை மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய இடங்கள் ஆகும். ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை இந்த மாநிலங்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கிழக்கு-மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை துறை தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் வங்காள விரிகுடா மற்றும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரேபிய கடல், கோவா, கர்நாடகா, ராயலசீமா, கொங்கனின் சில பகுதிகள், தமிழகத்தின் மீதமுள்ள பகுதிகள், கடலோர ஆந்திராவின் சில பகுதிகள், மத்திய மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகி வருகின்றன. அடுத்த 2-3 நாட்களில் வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.