கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அவசியம்… பிரதமர் மோடிக்கு பறந்த அவசர கடிதம்!

 

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அவசியம்… பிரதமர் மோடிக்கு பறந்த அவசர கடிதம்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீயாய் பரவிவருகிறது. சராசரியாக தினமும் 90 ஆயிரம் பேர் பாதிப்படைகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 400 பேர் உயிரிழக்கின்றனர். இதனால் மகாராஷ்டிராவில் வாரக் கடைசி நாள்களில் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. இன்று டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அவசியம்… பிரதமர் மோடிக்கு பறந்த அவசர கடிதம்!

கொரோனா பரவலைத் தடுக்க குறிப்பிட்ட நேரத்துக்குத் தொடர்ச்சியாக ஊரடங்கு அவசியம் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ”தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி செலுத்துகிறோம். ஆனால் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், நம்முடைய தடுப்பூசி செலுத்தும் முறையைப் போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்தி, மாற்றியமைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அவசியம்… பிரதமர் மோடிக்கு பறந்த அவசர கடிதம்!

தடுப்பூசி செலுத்தும் பணியில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் கொண்டு வருவதைக் கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனிநபர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் மந்தத் தடுப்பாற்றலையும் ஏற்படுத்தும். கொரோனா தொற்றுச் சங்கிலியை உடைக்கவும் உயர்ந்துவரும் பாதிப்பைத் தடுக்கவும் குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ந்து ஊரடங்கைப் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக திரையரங்குகள், கலாச்சார, மதரீதியான வழிபாடுகள், விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.