உங்க பதஞ்சலி மருந்தை எந்த அலோபதி மருத்துவமனையில் பயன்படுத்தினாங்க? ராம்தேவுக்கு ஐ.எம்.ஐ. கேள்வி

 

உங்க பதஞ்சலி மருந்தை எந்த அலோபதி மருத்துவமனையில் பயன்படுத்தினாங்க? ராம்தேவுக்கு ஐ.எம்.ஐ. கேள்வி

உங்க பதஞ்சலி மருந்தை எந்த அலோபதி மருத்துவமனையில் பயன்படுத்தினாங்க என்று பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

அலோபதி மருத்துவம், கோவிட்-19 தடுப்பூசி, நவீன மருத்துவம் குறித்து யோகா பாபா ராம்தேவ் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தார். இதனையடுத்து தடுப்பூசி குறித்து தவறான பிரசாரம் செய்யும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளை தெரிவித்த பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

உங்க பதஞ்சலி மருந்தை எந்த அலோபதி மருத்துவமனையில் பயன்படுத்தினாங்க? ராம்தேவுக்கு ஐ.எம்.ஐ. கேள்வி
இந்திய மருத்துவ சங்கம்

இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, பாபா ராம்தேவ்விடம் அலோபதி குறித்து அவரது கருத்துக்காக ரூ.1,000 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ராம்தேவுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாபா ராம்தேவ்வை விவாதத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு சவால் விடுத்துள்ளது. உங்க பதஞ்சலி மருந்தை எந்த அலோபதி மருத்துவமனையில் சிகிச்சையில் பயன்படுத்தினாங்க? என்று ராம்தேவ்விடம் இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது பதஞ்சலி நிறுவன மருந்துகளை அலோபதி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்துவது கிடையாது என்பதை மறைமுகமாக சொல்லியுள்ளது.

உங்க பதஞ்சலி மருந்தை எந்த அலோபதி மருத்துவமனையில் பயன்படுத்தினாங்க? ராம்தேவுக்கு ஐ.எம்.ஐ. கேள்வி
பதஞ்சலி

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயலால் கூறுகையில், கோவிட்-19 தடுப்பூசி மற்றும் நவீன மருத்துவம் தொடர்பான தனது கருத்தை பாபா ராம்தேவ் திரும்ப பெற்றால், ராம்தேவ் மீதான போலீஸ் புகார் மற்றும் அவருக்கு அனுப்பப்பட்ட அவதூறு வழக்கையும் திரும்ப பெறுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.