‘போதையால் பஞ்சரான பஞ்சாப்’ -கள்ளச்சாராயம் குடித்த 41 பேர் மரணம் -முதல்வர் விசாரணைக்கு உத்தரவு

‘போதையால் பஞ்சரான பஞ்சாப்’ -கள்ளச்சாராயம் குடித்த 41 பேர் மரணம் -முதல்வர் விசாரணைக்கு உத்தரவு

பஞ்சாப் மாநிலம் மஜா பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் மூன்று மாவட்டங்களில் குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகரித்த நிலையில், இறப்புகள் குறித்து கோர்ட் விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார்.

‘போதையால் பஞ்சரான பஞ்சாப்’ -கள்ளச்சாராயம் குடித்த 41 பேர் மரணம் -முதல்வர் விசாரணைக்கு உத்தரவு

பஞ்சாப் மாநிலத்தில் புதன் கிழமையன்று கள்ளச்சாராயம் குடித்ததில் 20பேர் இறந்தனர் .ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்குள் இறப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது .இதனால் போலீஸ் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் 40 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை நடத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சும் பலரை கைது செய்தனர் .மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய ட்ரம்கள் ,வெல்லம் ,பேட்டரிகள் போன்றவற்றையும் ,சில போதை மாத்திரைகள்,கள்ளச்சாராயமிருந்த பீப்பாய்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர் .

‘போதையால் பஞ்சரான பஞ்சாப்’ -கள்ளச்சாராயம் குடித்த 41 பேர் மரணம் -முதல்வர் விசாரணைக்கு உத்தரவு
மேலும் இந்த ரெய்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பால்விந்தர் கவுர் மிது ,தத்தான் ராணி மற்றும் ராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.இவர்களை தவிர டார்ன் தரனில் வசிக்கும் காஷ்மீர் சிங், ஆங்ரேஸ் சிங், அமர்ஜித் மற்றும் பால்ஜித் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதல்வர், பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் போலி மதுபான உற்பத்தி ஆலைகளை அழிக்கும் வேலையை தொடங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.