darbar
  • January
    17
    Friday

Main Area

Mainஉடல் இச்சைக்காக பிஸ்கட்டில் விஷம் வைத்து குழந்தையைக் கொன்ற கொடூர தாய்!

குழந்தை ஸ்ரீதேவி - தாய் ரூபிணி
குழந்தை ஸ்ரீதேவி - தாய் ரூபிணி

சரவணம்பட்டி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையைத் தாயே பிஸ்கட்டில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரூபிணி.திருமணம் ஆகி,ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் பின்னிரவு நேரத்தில் அவரது போனுக்கு ஒரு கால் வந்திருக்கிறது.பேசிய நபர் தன்னோட பெயர்  தமிழ் என்று சொல்லிப் பேசியிருக்கிறான்.

rubini

அவன் கேட்ட விவரங்களுக்கு முதலில் ராங் நம்பர் என்று சொல்லி கோபத்தோடு போன் அழைப்பைத் துண்டித்திருக்கிறார். “இல்லைங்க...நான் சொல்ல வர்றது என்னனா…’ என்று அர்த்த ராத்திரியில் அவன் வீசிய வார்த்தை வலையில் சிக்கி,தன்னோட சொந்தக்கதை சோகக்கதை, கணவனோடு என்ன பிரச்சினை என்பதுவரை என்பதுவரை எல்லாத்தையும் சொல்லியிருக்கிறார்.

அப்புறம் என்ன...அதுவே இருவரையும் நேரில் ‘சந்திக்கிற’ அளவுக்கு கொண்டு போயிருக்கிறது.சந்திப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை ‘இனிமேல் நீ தனியா இருக்க வேண்டாம்’ என்று சொல்லி சரவணம்பட்டிக்கு அழைத்திருக்கிறான்.ரூபிணியும் வந்திருக்கிறார். இரவு முழுவதும் தனிமையில் இருந்திருக்கிறார்கள். காலையில் ரூபிணி தன்னுடைய குழந்தையை காணவில்லை என்று தேடி வந்துள்ளார். 

ruby

இது ஒருபுறமிருக்க, சரவணம்பட்டி கரட்டுமேட்டில்  3 வயது பெண் குழந்தை தலையில் காயத்துடன் பிணமாக கிடந்துள்ளது. இந்த தகவல் போலீசுக்கு கிடைக்க சம்பவ இதற்கு வந்த அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்போது ரூபிணி குழந்தையை தேடும் விவரம் போலீசுக்கு தெரியவர, ரூபிணியை அழைத்து வந்து விசாரித்ததில் அது அவரது குழந்தை தான் என்பது தெரியவந்துள்ளது.  இது குறித்து போலீசாரிடம், 'என்னுடைய கள்ளக்காதலன் தமிழ்,குழந்தை ஸ்ரீதேவியை  பாட்டி வீட்டில் விட்டு வருவதாக கூறிச்சென்றார். பின்னர் அவரை காணவில்லை. தற்போது பார்த்தால் என் மகள் பிணமாக இருக்கிறாள்'  என்று கூறி கதறி அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், ரூபிணியிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். 

இந்நிலையில் போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையைக் கொன்றதாகத் தாய் ரூபினி ஒப்புக்கொண்டாள். இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'பால்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தேன். மகள் ஸ்ரீதேவி என்னுடன் இருந்து வந்தாள். அப்போது சினிமா படப்பிடிப்பு குழுவுக்கு தொழிலாளர்களை சப்ளை செய்யும் தமிழ் என்பவர் ராங் கால் மூலம் எனக்கு பழக்கமானார். முதலில் நட்பாக பழகிய எங்கள் உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் அடிக்கடி தனிமையிலிருந்து வந்தோம். எங்களுக்குக் குழந்தை ஸ்ரீதேவி இடையூறாக இருந்தாள். இதனால் குழந்தையைக் கொல்ல  திட்டமிட்டோம்.

sridevi

இதையடுத்து பிஸ்கட்டில் குழந்தைக்கு விஷம் கலந்து ஊட்டினேன். குழந்தை சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து,  காதலன் தமிழிடம் கொடுத்து எங்காவது கொண்டு வீசி விட்டு வருமாறு கூறினேன். அவரும் கரட்டுமேடு பகுதியில் வீசினார்' என்று கூறியுள்ளார்.

இந்த கொடூர தாயின் பிடியில் சிக்கிய குழந்தை ஸ்ரீதேவியின் உடல்  பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரூபிணியை கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலன் தமிழை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.