darbar
  • January
    19
    Sunday

Main Area

Main



கள்ளக்காதல் விவகாரத்தை கணவரிடம் கூறியதால் மகளை கொன்ற தாய்: உண்மை நிலவரம்?

murder
murder

சேலம்: தன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தைக் கணவரிடம் கூறியதால் மகளை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர்  இவருக்குப் பிரியங்கா காந்தி என்ற மனைவியும்,  ஷிவானி என்ற மகளும் உள்ளனர். விவசாயியான ஷங்கர்  இவர் சில  ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று வேலைபார்த்து வருகிறார்.  

இதனால் பிரியங்கா காந்தி, தனது மகளுடன் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு  பிரியங்கா காந்தியும், மகள் ஷிவானியும்  60 அடி ஆழ விவசாய கிணற்றில்  தத்தளித்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியங்கா காந்தியை உயிருடனும், ஷிவானியை பிணமாகவும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் பிரியங்கா காந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொள்ளையர்கள் பணத்தை பறித்துக்கொண்டு, சிறுமியை கிணற்றில் வீசி கொன்று விட்டு சென்றதாக தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பிரியங்கா காந்தி மகளை தான்தான் கொன்றேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.  கடந்த 24-ந்தேதி மகளுடன் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றேன். அப்போது வெளிநாட்டில் இருந்து போன் செய்த எனது கணவர் ஷங்கரிடம், எனது மகள் ஷிவானி எனது கள்ளக்காதல் விவகாரத்தைக் கூறி விட்டாள். எனவே அவளை கிணற்றில் வீசி கொன்று விட்டு, நானும் கிணற்றில் குதித்து கொள்ளையர்கள் தள்ளி விட்டதாக நாடகமாடினேன்' என்றார். இதனையடுத்து பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது .

2018 TopTamilNews. All rights reserved.