“அமெரிக்காவிடமே ஆட்டைய போட்ட கூட்டம்” கம்ப்யூட்டருக்குள் வைரஸை அனுப்பி ,கோடிக்கணக்கில் கொள்ளையடித்த போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு.

“அமெரிக்காவிடமே ஆட்டைய போட்ட கூட்டம்” கம்ப்யூட்டருக்குள் வைரஸை அனுப்பி ,கோடிக்கணக்கில் கொள்ளையடித்த போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு.

போலியாக கால் சென்டர் நடத்தி அமெரிக்கா ,இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பலரிடம் பல கோடிகள் மோசடி செய்த கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள்.

“அமெரிக்காவிடமே ஆட்டைய போட்ட கூட்டம்” கம்ப்யூட்டருக்குள் வைரஸை அனுப்பி ,கோடிக்கணக்கில் கொள்ளையடித்த போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு.
ஹரியானா மாநிலம் குருகிராமில் சோனா ரோட்டில் உள்ள ஒரு போலியான கால் சென்டர் உரிமையாளர்கள் விக்ரம் மற்றும் ரிஷபன் ஆகியோர் .இவர்கள் 150 பேருடன் நடத்தும் கால் சென்டரில் அமெரிக்காவை சேர்ந்த 35000 பேருக்கு மேல் வாடிக்கையாளராக உள்ளார்கள் .இவர்கள் அமெரிக்காவில் உள்ள பலரின் கம்ப்யூட்டர்களை போலியான சில வைரஸ்களை அனுப்பி அவர்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து விடுவார்கள் .உடனே அவர்களின் திரையில் ‘உடனே உங்கள் கம்ப்யூட்டரை சரி செய்யாவிட்டால் உங்களின் சிஸ்டத்திற்குள்ளிருக்கும் தகவல் அழிந்து விடும்’ என்று காமிக்கும் .அதற்கு கீழே அந்த கால் சென்டரை தொடர்பு கொள்ள சொல்லி அவர்களின் மெயில் மற்றும் போன் நம்பர்களும் இருக்கும் .உடனே அமெரிக்கர்கள் இவர்களை தொடர்பு கொண்டதும் இவர்கள் அதை சரிசெய்யும் மென்பொருளை பல்லாயிரம் டாலர்களுக்கு விற்று விடுவார்கள் .அடிக்கடி பலரிடம் இப்படி மோசடி செய்து பல கோடிகள் இவர்கள் சம்பாதித்துள்ளனர் .
இந்த மோசடி பற்றி போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்ற வாரம் அந்த போலி கால் சென்டரில் ரெய்டு நடத்திய போலீசார் ,அந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து, அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி ,அந்த நிறுவன உரிமையாளர்களை கைது செய்துள்ளனர் .

“அமெரிக்காவிடமே ஆட்டைய போட்ட கூட்டம்” கம்ப்யூட்டருக்குள் வைரஸை அனுப்பி ,கோடிக்கணக்கில் கொள்ளையடித்த போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு.