இளையராஜாவின் அண்ணன் மகன் காலாமானார்!

 

இளையராஜாவின் அண்ணன் மகன் காலாமானார்!

பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் இயக்குனர் “பாவலர் மைந்தன் ” Jov Danial சற்று முன் உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார். ஜோவின் திடீர் மரணம் திரையுலக நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இயக்குநர் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் இசைஞானி இளையராஜவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் இளைய மகன் ஆவார். இயக்குநர் ஆர்.வி உதயகுமார் அவர்களுடைய யூனிட்டிலும் இணைந்து பணியாற்றிவர்.

கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் உட்பட பல படங்களுக்கு இணை இயக்குநராகவும் கற்க கசடற படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற திரைப்படத்தை பாவலர் மைந்தன் இயக்கியுள்ளார். எதிர்பாராத இவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்துள்ளது.