ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இளவேனில்! குவியும் வாழ்த்து

 

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இளவேனில்! குவியும் வாழ்த்து

துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சாதனை படைத்த கடலூர் வீராங்கனை செல்வி. இளவேனில் வாலறிவன் வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இளவேனில்! குவியும் வாழ்த்து

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். அதனால் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் இளவேனில் பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலும் சாதனை படைத்தார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் உலக அளவில் சாதனை புரிந்த கடலூரைச் சேர்ந்த தமிழக வீராங்கனை செல்வி.இளவேனில் வாலறிவன் டோக்கியோவில் நடைபெறும் 2021-ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமைச்சர் எஸ்பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “துப்பாக்கி சுடுதல் போட்டியில் உலக சாதனை படைத்த கடலூர் வீராங்கனை செல்வி. இளவேனில் வாலறிவன் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒலிம்பிக் போட்டியிலும் சாதனை படைத்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளாஅர்.