‘விலை மதிப்பு மிக்க பொருட்களை சேதப்படுத்திவிட்டார்’ பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!

‘விலை மதிப்பு மிக்க பொருட்களை சேதப்படுத்திவிட்டார்’ பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளரான எல்.வி.பிரசாத், இளையராஜாவை தங்களது ஸ்டூடியோவில் தொடர்ந்து தங்கி இசை அமைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.ஸ் டூடியோவில் ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றையும் இளையராஜாவிற்கு கொடுத்திருந்தார். தற்போது வரை இளையராஜா, அந்த ஸ்டூடியோவைதான் பயன்படுத்தி வந்தார்.

‘விலை மதிப்பு மிக்க பொருட்களை சேதப்படுத்திவிட்டார்’ பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!

ஆனால் கடந்த செப்டம்பர் 6-ம்தேதி முதல், பிரசாத் ஸ்டூடியோ ஊழியர்கள் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் ரெகார்டிங் தியேட்டரில் 20 கம்ப்யூட்டர் டேபிளை வைத்துக் கொண்டு இடையூறு செய்து வந்தனர். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. இந்த விவகாரத்தில் இயக்குநர் பாரதிராஜா உள்பட பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகக் கைகொடுத்தனர். இது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தையில் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் ஈடுபட்ட போது இவர்களுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ இடையேயான விவகாரத்தைச் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவிட்டது.

‘விலை மதிப்பு மிக்க பொருட்களை சேதப்படுத்திவிட்டார்’ பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது இளையராஜா புகார்!

இந்த நிலையில், பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஸ்டூடியோவில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த இசை நோட்ஸ்களை பிரசாத் சேதப்படுத்தி விட்டதாகவும் அதனை கள்ளச்சந்தையில் விற்றுவிட்டதாகவும் விலை மதிப்புமிக்க பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.