‘இறந்து போனவர்கள் பற்றி பேசக் கூடாது.. அது அநாகரீக அரசியல்’ – இல.கணேசன் கருத்து!

 

‘இறந்து போனவர்கள் பற்றி பேசக் கூடாது.. அது அநாகரீக அரசியல்’ – இல.கணேசன் கருத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, திமுக எம்.பி ஆ.ராசா பேசியது ஆளும் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. திஹார் ஜெயில் வா வா என்று கூறுவதால் அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் 2ஜி வழக்கில் தான் சிக்கியிருப்பதை உணராத ஆ.ராசா பொது வெளியில் வாய் துடுக்காக பேசக் கூடாது என்றும் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கை விதித்திருந்தனர்.

‘இறந்து போனவர்கள் பற்றி பேசக் கூடாது.. அது அநாகரீக அரசியல்’ – இல.கணேசன் கருத்து!

இந்த நிலையில் இது குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பேசிய பாஜக மூத்த தலைவர் இல கணேசன், வேளாண் சட்டங்கள் தவறானதை போல எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றும் இந்து கடவுளை சிலர் அவதூறாக பேசியதால் தான் வேல் யாத்திரை நடத்தப்பட்டது என்றும் பாஜக எந்த மதத்தினர் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இறந்து போன தலைவர்களை பற்றி பேசுவது அநாகரீக செயல் என கருத்து தெரிவித்த அவர், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த டிச.31ம் தேதி அறிவிப்பின் பிறகு தான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.