ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி சாதனை!

ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி சாதனை!

உலகின் மிகவும் கொடூரமான நோய்களைத் தடுக்க மருந்துகளைக் கண்டுபிடித்தாலும் அபாயகரமான எய்ட்ஸ்க்கு மட்டும் தடுப்பு மருந்து கண்டறிய முடியாமல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் திணறிவந்தனர். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். பல உயிர்களைக் காவு வாங்கிய எய்ட்ஸ் நோயால் இனி உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றனர்.

ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி சாதனை!

சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய்பிந்தி ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்தக் குழுவினரின் ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது.

ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு – சென்னை ஐஐடி சாதனை!

அதன்படி அனைத்து தடுப்பு மருந்துகளையும் செயல்பட விடாமல் தடுத்த ஹெச்ஐவி வைரஸின் பலவீனமான பகுதியை முதற்கட்டமாகக் கண்டறிந்துள்ளனர். அதன்பின் அதற்கேற்றார்போல அதன் மூலக்கூறுகளைச் சிதைக்கும் வண்ணம் மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.