இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு! மருத்துவ பிரிவில் சி.எம்.சி-க்கு 3ம் இடம்

 

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு! மருத்துவ பிரிவில் சி.எம்.சி-க்கு 3ம் இடம்

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தர வரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மருத்துவப் பிரிவில் வேலூர் சி.எம்.சி-க்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியா இன்று என்ஐஆர்எஃப் எனப்படும் தேசிய கல்வி நிறுவனங்கள் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். வழக்கமாக ஏப்ரல் மாதம் இந்த பட்டியல் வெளியிடப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு மாத கால தாமதத்துக்குப் பிறகு பட்டியல் இன்று வெளியானது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு! மருத்துவ பிரிவில் சி.எம்.சி-க்கு 3ம் இடம்
இதில், ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் பெங்களூரூவில் உள்ள ஐஐஎஸ்-க்கும், மூன்றாம் இடம் டெல்லி ஐஐடி-க்கும் கிடைத்துள்ளது.
பல்கலைக் கழக பிரிவில், முதலிடம் பெங்களூரூ ஐஐஎஸ்-க்கும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்கு இரண்டாவது இடமும், மூன்றாம் இடம் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்துக்கும் கிடைத்துள்ளது. பொறியியல் பிரிவில் சென்னை , டெல்லி, பம்பாய் ஐஐடி-க்கள் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன. மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.