உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 4வது, உயிரிழப்பில் 3வது இடம்!

 

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 4வது, உயிரிழப்பில் 3வது இடம்!

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. முன்னணி வலைத்தளத்தின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த அளவில் 75 லட்சத்து 15 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 4 லட்சத்து 20 ஆயிரத்து 517 பேர் பலியாகி உள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 4வது, உயிரிழப்பில் 3வது இடம்!

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8,473 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 74 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பில் இந்தியா மூன்றாம் இடத்திலுள்ளது குறிப்பிடதக்கது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் ரஷ்யா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நாடுகள்        வைரஸ் பாதித்தவர்கள்
அமெரிக்கா   20.71 லட்சம்
பிரேசில்         7.75லட்சம்
ரஷ்யா            5.02லட்சம்
இந்தியா         2.97 லட்சம்
பிரிட்டன்         2.91 லட்சம்
ஸ்பெயின்       2.89லட்சம்
இத்தாலி          2.35 லட்சம்
பெரு               2.08 லட்சம்
ஜெர்மனி         1.86 லட்சம்
ஈரான்              1.80 லட்சம்