“தரம் தாழ்ந்த திமுக கூட்டணி கட்சிகளை புறக்கணியுங்கள்” : சுவாமி ராமானந்தா

“தரம் தாழ்ந்த திமுக கூட்டணி கட்சிகளை புறக்கணியுங்கள்” : சுவாமி ராமானந்தா

திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரதிய துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தரம் தாழ்ந்த திமுக கூட்டணி கட்சிகளை புறக்கணியுங்கள்” : சுவாமி ராமானந்தா

அகில இந்திய துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா, “தமிழை வளர்க்கிறோம் என்று திமுக இந்து தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்தியுள்ளது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிறந்த பூமி இது, திமுகவினர் திருமண சடங்குகளை கொச்சைப்படுத்துகின்றனர். கந்தசஷ்டி போன்ற பக்தி இலக்கியங்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். சனாதன தர்மத்தை அழிக்க திட்டமிடுகின்றனர். ஆனால் தேர்தல் வந்ததும் இந்துக்களிடம் வந்து ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

“தரம் தாழ்ந்த திமுக கூட்டணி கட்சிகளை புறக்கணியுங்கள்” : சுவாமி ராமானந்தா

தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு தடை கோரிய திமுகவை தேர்தல் நேரத்தில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பல்வேறு பணிகளை செய்தார். அவருக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் . இது மதசார்பற்ற அரசு என்பவர்கள் கிறிஸ்துவ ஆலயங்கள். மசூதிகளில் தலையிடுவது இல்லை. ஆனால் கோயில்களில் மட்டும் இவர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. எனவே கோவில்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ,நேர்மையான புரவலர்கள் கொண்ட தனி வாரியம் அமைக்கப்பட்டு நிர்வகிக்க வேண்டும். இந்துக்களை கேவலப்படுத்துவோருக்கு எதிராக ஓட்டுப் போடுங்கள்” என்றார்.