“டிடிவி தினகரனை நம்பிசென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்” – முதல்வர் எச்சரிக்கை

 

“டிடிவி தினகரனை நம்பிசென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்” – முதல்வர் எச்சரிக்கை

டிடிவி தினகரனை நம்பி சென்றால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக நிர்வாகிகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நம்பி சென்றால், அவர்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டி வரும் என தெரிவித்தார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நம்பி சென்று நடுரோட்டில் நிற்பதாகவும் கட்சியினரை எச்சரித்தார்.

“டிடிவி தினகரனை நம்பிசென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்” – முதல்வர் எச்சரிக்கை

தொடர்ந்து பேசிய முதல்வர், கட்சியில் 10 ஆண்டு காலமாக உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருவதாக தெரிவித்த முதலமைச்சர், அதனை அதிமுக முறியடிக்கும் என்றும் சூளுரைத்ததார்.