பைக்கில் வெளியில் சுற்றினால்…காவல்துறை கடும் எச்சரிக்கை!

 

பைக்கில் வெளியில் சுற்றினால்…காவல்துறை கடும் எச்சரிக்கை!

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மதியம் 12 மணிவரை மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. இதை பொதுமக்கள் பலர் தவறாக பயன்படுத்தி பைக்கில் ஊர் சுற்றி வருகிறார்கள். இதனால் சென்னையில் வாகன போக்குவரத்து ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து இருந்து வருகிறது.

பைக்கில் வெளியில் சுற்றினால்…காவல்துறை கடும் எச்சரிக்கை!

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து தேவையில்லாமல் வெளியில் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

பைக்கில் வெளியில் சுற்றினால்…காவல்துறை கடும் எச்சரிக்கை!

இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றுவோரிடம் அபராதம் வசூலிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. முழு ஊரடங்கிலும் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தவறாக பயன்படுத்தி பைக்கில் சுற்றுவோரிடமும், மாஸ்க் அணியாதவர்களிடமும் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மாஸ்க் அணிய வலியுறுத்துகின்றனர்.